இனம், மதத்தின் பெயரில் இயங்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் | தினகரன்

இனம், மதத்தின் பெயரில் இயங்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்

சகல மதங்களுக்கும் ஒரே அமைச்சு சிறந்தது

பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என தனித்தனி அமைச்சுக்களை அமைத்துள்ளதை விடுத்து முன்பிருந்தது போல் அனைத்து சமயங்களுக்கும் ஒரே அமைச்சை அமைக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் மதம் அல்லது இனத்தின் பெயரில் செயற்படும் அரசியல் கட்சி களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்டத் தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களது கையாட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அரசியல் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் அறிவுபூர்வமான மக்கள் என்ற வகையில் பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுவது நல்லதல்ல என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...