Tuesday, April 16, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
January 8, 2024 8:50 am 0 comment

அடியவர் வந்து கேட்டால் என்ன செய்வேன்? அவரின் உடல் குளிரில் நடுங்க காரணமாகி விட்டேனே.’ அடியவருக்கு தீங்குசெய்து பெரும்பாவி ஆகிவிட்டேனே என மனதிற்குள் தினைத்து மருவி உருகினார்.

அழுக்குக் கச்சையாக இருந்தாலும் குளிரிலிருந்து அவரைக் காக்குமே? நான்தான் அவரிடம் வலுக் கட்டாயமாக வெளுத்து உலர்த்தி தருகிறேன் என்று பிடுங்கினேன் இப்பாவம் எம்மை சும்மாவிடாது. அடியவரை நான் எவ்வாறு காண்பேன்? அடியாருக்கு துன்பம் இளைத்த நான் இம்மண்ணில் வாழ்வதைவிடவும் உயிரை விடுவதே சரி’ என்று எண்ணினார்.

துணி துவைக்கும் பாறையில் தன்னுடைய தலையை மோதிக்கொள்ள எண்ணி தலையைச் சாய்த்தார். அப்போது அப்பாறையின் அருகே ஏகாம்பர‌நாதர் தம்முடைய மலர்கரத்தால் திருக்குறிப்புத் தொண்டர் தலை பாறையில் மோதாமல் தடுக்கச் செய்தார்.

திருக்குறிப்புத் தொண்டர் தொண்டுக்கு உறுதுணையாக இருந்த துணி வெளுக்கும் பாறை, இறைவனின் திருக்கரம் எழுந்தருளிய ஆலயமாக மாறியது.

மேகங்கள் மறைந்தன. பொன்னொளி எங்கும் பரவியது. சிவனார் உமையம்மையுடன் இடபவாகனத்தில் எழுந்தருளினார்.

இறைவன் “உலகம் முழுவதும் உன்னுடைய திருத்தொண்டின் பெருமையை அறிவித்தோம். நீ எம்முடன் இருந்து இன்புறுவாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

திருக்குறிப்புத் தொண்டர் நிலைத்த வீடுபேறாகிய சிவபுரத்தில் மூழ்கி இன்புற்று இருந்தார்.

அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக இறைவனால் அருளப்பெற்றார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் குருபூசை சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருகுறிப்புத்தொண்ட நாய னார் திருவடிகள் போற்றி அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.

(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT