விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | தினகரன்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் கடலூர் பொலிஸ் அதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள், கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.இது குறித்து மாவட்ட பொலிஸ் தலைமையகத்திடம் முறைப்பாடு செய்யுமாறு கடலூர் பொலிஸ் தலைமையக அதிகாரி தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Add new comment

Or log in with...