காங்கிரஸின் மூத்த தலைவரை மன்னிப்புக் கோருமாறு கூறியுள்ளேன் | தினகரன்

காங்கிரஸின் மூத்த தலைவரை மன்னிப்புக் கோருமாறு கூறியுள்ளேன்

சீக்கியர் படுகொலை தொடர்பான கருத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர், சாம் பிட்ரோடா மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென அவரைக் கேட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1984 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர், சாம் பிட்ரோடா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆமாம் நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய என அவர் கூறியிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இவரின் கூற்றைக் கண்டித்துள்ளன.இது குறித்து கருத்து வெளியிட்ட பஞ்சாப் மாநில முதலர்வர் (காங்கிரஸ்) இக்கருத்துக் குறித்து பெரும் கவலையடைவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சீக்கியர் படுகொலை மிகவும் மோசமான சம்பவம் என்பதே, காங்கிரஸின் நிலைப்பாடு. 'அந்த படுகொலைக்காக, மன்னிப்பும் கேட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிட்ரோடாவின் பேச்சை நிராகரிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என ராகுல் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...