தமிழக முதல்வர் தீவிர பிரச்சாரம் | தினகரன்

தமிழக முதல்வர் தீவிர பிரச்சாரம்

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். எதிர்வரும் 19 ஆம் திகதி இந்நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில் சூலூர் தொகுதியில் ஏற்கனவே முதற்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.கோவை வந்து தங்கியுள்ள முதல்வர் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் தொண்டர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்.

சின்னியம் பாளையம், முத்துகவுண்டன் புதூர், வாகராயம் பாளையம், கிட்டாம் பாளையம் நால் ரோடு, கருமத்தம்பட்டி (சோமனூர் பவர் அவுஸ்) சாமளாபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு, முதல்வர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.


Add new comment

Or log in with...