வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு | தினகரன்


வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு-Police Curfew Imposed to North Western Province

உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று (13) பிற்பகல்  குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, ஹெட்டிப்பொல, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாளை (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர, கொபேகனே ஆகிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஆயினும், பிரதேசத்தின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொருட்டு, மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...