மாணவர் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க விசேட திட்டம் | தினகரன்

மாணவர் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க விசேட திட்டம்

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீாரம் வழங்கியுள்ளது.   சமூக சுகாதாரம் மற்றும் கல்வி சுட்டெண்ணுக்கு அமைவாக இலங்கை இந்த பிரிவுகளில் ஆகக் கூடுதலான தரத்தை பெற்றுள்ளது.

இருப்பினும் இன்னும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மந்தபோஷாக்குடன் கூடிய சிறுவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக பாடசாலை மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பாடசாலையில் உணவு நிகழ்ச்சி நிரல் பாடசாலை பால் வழங்கும் வேலைத்திட்டம் திரிபோஷா வேலைத்திட்டம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் முதலான வேலைத்திட்டங்கள் வெவ்வேறான அமைச்சுக்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் விவசாய திணைக்களத்தினால் Save the Children அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வர்த்தக தொடர்புகளுடன் அடிப்படையில் சுய கட்டுப்பாடு எழுத்தறிவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 26மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. 

5வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் 8.8டொலர் பெறுமதியைக் கொண்ட உயர்த்தரத்திலான பொருட்கள் 4220மெற்றிக் தொன்னும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் போஷாக்கு சுகாதாரம் பராமரிப்பு கல்வி முதலான பிரிவுகளை மேம்படுத்துவதற்கான 13திட்டத்தில் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.  

இதற்கு மேலதிகமாக மந்த போஷாக்கை கொண்ட கிளிநொச்சி, முல்லைதீவு, திருகோணமலை, நுவரெலிய, பதுளை மற்றும் மொனராகலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 887பாடசாலைகளில் கல்வி பயிலும் 108,940எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் உள்ளுர் உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக முழுமையான உணவை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை பூர்த்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சமர்ப்பித்திருந்தனர். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.    


Add new comment

Or log in with...