மாட்டு வண்டிகளில் சட்டவிரோத மரக்கடத்தல்; 6 பேர் கைது | தினகரன்

மாட்டு வண்டிகளில் சட்டவிரோத மரக்கடத்தல்; 6 பேர் கைது

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியிலிருந்து மாட்டு வண்டிகளில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்டு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை வட்டார வன அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார். இப் பிரதேசத்தில் காட்டு மரங்கள் வெட்டப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தமது அலுவலக உத்தியோகஸ்தர்கள் பிரதேசத்திற்கு சென்று களப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மாட்டு வண்டிகளில் மரங்கள் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதை கண்டு அவற்றை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

பாசிக்குடா நிருபர்


Add new comment

Or log in with...