Friday, March 29, 2024
Home » விடைகொடுத்தார் டேவிட் வார்னர்; அனைத்து பக்கங்களிலும் நிறைந்த அன்பு

விடைகொடுத்தார் டேவிட் வார்னர்; அனைத்து பக்கங்களிலும் நிறைந்த அன்பு

- நெகிழ்ச்சியில் சிட்னி மைதானம்

by Prashahini
January 6, 2024 12:08 pm 0 comment

அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் டேவிட் வார்னர் தனது கடைசி இன்னிங்ஸில் அரைசதம் விளாசிவிட்டு, கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ள சம்பவம் இரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ஓட்டங்ககளுக்கு ஆல் அவுட்டான நிலையில், அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் சேர்த்து 130 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன்பின் கடைசி முறையாக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் தரப்பில் மீண்டும் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் டேவிட் வார்னர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் சேர்த்தார். அவுஸ்திரேலிய அணியின் 119 ஓட்டங்களை எட்டிய நிலையில், வார்னர் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்ட டேவிட் வார்னர், சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயர்த்தி பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அதன்பின் பெவிலியன் அருகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு தனது ஹெல்மெட், கிளவுஸ் உள்ளிட்டவற்றை கழற்றி பரிசாக அளித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

அதனை வாங்கிய அந்த சிறுவன் உற்சாகத்தை வெளிப்படுத்த பெற்றோரை நோக்கி ஓடிய வீடியோ காண்போரை மகிழ்ச்சிபடுத்தியது. இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியா அணி வென்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி வீரர்களை வழிநடத்தி டேவிட் வார்னர் அழைத்து வந்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகளை குலுக்கினார். அதன்பின் நேராக தனது மகள்களை பார்த்த டேவிட் வார்னர், அவர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பின் கடைசி போட்டியை முன்னிட்டு டேவிட் வார்னர் பேட்டி கொடுத்த போது, திடீரென பேச முடியாமல் கண்ணீர் சிந்திய காட்சிகள் இரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் சிட்னி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் களமிறங்கி அவரை பாராட்டினர். 1990களில் இரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடி வரும் சூழல் இருந்தது. அதன்பின் தற்போது சிட்னி மைதானத்தில் இரசிகர்கள் நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT