Thursday, March 28, 2024
Home » வெளியானது 2024 உலக கிண்ணப் போட்டி தொடருக்கான அட்டவணை

வெளியானது 2024 உலக கிண்ணப் போட்டி தொடருக்கான அட்டவணை

- மொத்தமாக 20 அணிகள் தொடரில் பங்கேற்பு

by Prashahini
January 6, 2024 9:19 am 0 comment

உலகக் கிண்ண T20 தொடர் வரும் ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ICC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதையடுத்து, இந்த ஆண்டிற்கான T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது.

இந்த உலகக் கிண்ண T20 தொடரானது வரும் ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் , நேபாளம், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமான், பப்புவா நியூகினியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெறும். ஜூன் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் முதல் மற்றும் 2ஆவது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29ஆம் திகதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது.

குரூப் A:
இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் B:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்கொட்லாந்து, ஓமான்

குரூப் C:
நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,

குரூப் D:
தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து, நேபாளம்

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 24 ஆம் திகதி வரையில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT