எரிபொருள் விலைகள் அதிகரிப்பு | தினகரன்


எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு-மே மாதம்-Fuel Price Increase Month of May-Fuel Price Fomula

இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 3 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 2 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த மார்ச் மாதம் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டியிருந்த நிலையில்பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என நிதியமைச்சு அறிவித்திருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 132 இலிருந்து ரூபா 135 ஆக ரூபா 3 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 159 இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 7 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104
  • சுப்பர் டீசல் - ரூபா 134 இலிருந்து ரூபா 136 ஆக ரூபா 2 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Mar 12, 8.04pm


Add new comment

Or log in with...