இறைவனின் வார்த்தைகளை நம்பியவர்கள் வாழ்வு பெறுவர் | தினகரன்

இறைவனின் வார்த்தைகளை நம்பியவர்கள் வாழ்வு பெறுவர்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இறைவனின் வார்த்தைகளை நம்பியவர்கள் வாழ்வு பெறுவர். அவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.  

நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்துபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கிறிஸ்தவர்களின் முக்கிய தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நாட்டில் எந்த ஆலயங்களிலும் திருப்பலிப் பூசைகள் இடம்பெறாத நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் பேராயர் இல்லத்தில் பொது திருப்பலி நிறைவேற்றப்பட்டது.   கத்தோலிக்க விசுவாசிகள் வீடுகளிலிருந்தவாறே தொலைக்காட்சி ஊடாக திருப்பலிப் பூஜையில் பங்கேற்றனர்.  

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது திருப்பலி மறையுரையில் நற்செய்தி வாசகத்திலிருந்து ஒருபகுதியை எடுத்து அதனை தெளிவுபடுத்தினார்.

இயேசுவின் சீடரான மீனவர்கள் வலைகளை போடும் கடற்பகுதிக்குச் செல்லுமவர் அவர் கூறும் இடத்தில் வலைகளைப் போடுமாறு பணிக்கின்றார்.  

எனினும் இரவிரவாக அந்த சீடர்கள் அப்பகுதியில் வலைகளைப் போட்டும் எந்த மீன்பாடும் கிடைக்காத நிலையில் யேசு கிறிஸ்து கூறியதற்காக அவ்விடத்தில் வலைகளைப் போடுகின்றனர்.  

ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் எதிர்பாராதவிதமாக வலைகள் கிழியுமளவிற்கு பெருமளவு மீன்கள் கிடைக்கின்றன.  

இந்த நிகழ்வானது இறைவனின் வார்த்தைகளை நம்பியவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என்பதையே காட்டுகிறதுஎன்றும் பேராயர் தெரிவித்தார்.  உயிர்த்த இயேசுவைக் காணச்சென்ற வேளையில் ஆலயங்களில் உயிரிழந்து காயப்பட்டு பரிதவிக்கும் மக்களை உயிர்த்த இயேசு  தாயன்போடு அரவணைக்க வேண்டும் என்று செபிப்போம்.  (ஸ)


Add new comment

Or log in with...