ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது | தினகரன்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இரண்டு கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவரை (68)  பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் நேற்றிரவு (06) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை, மாபொல பகுதியை சேர்ந்த முஹமட் ஹசன் முஹமட் அக்ரம் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியா, சென்னையிலிருந்து வந்த இச்சந்தேக நபர், தனது பயணப்பொதியின் அடிப்பகுதியில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பொலிஸார் கோரவுள்ளனர்.


Add new comment

Or log in with...