- கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல்
- நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று ஊரடங்கு இல்லை
கிழக்கு மாகாணத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் காலை 10.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாட்டில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலை 5.00 மணியிலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரை சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற, கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தின் வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து இன்று முற்பகல் 10.00 மணியளவில் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment