சாய்ந்தமருதில் வெடிப்பு சம்பவம்; கிழக்கில் ஊரடங்கு

சாய்ந்தமருதில் வெடிப்பு சம்பவம்; கிழக்கில் ஊரடங்கு-Sainthamaruthu Blast-Curfew Imposed Immediately

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சாய்ந்தமருது, வொலிவேரியன் வீட்டுத் திட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சம்பவத்தின்போது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சாய்ந்தமருது பிரதேசம் உள்ளடங்கும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில், மீள அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய பிரதேசங்களில் ஏற்கனவே அறிவித்தல் விடுத்ததற்கு அமைய, இன்று (26) இரவு 10.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (26) பிற்பகல், சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சயில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள், ஜெலிக்னைற் குச்சிகள், சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு பந்துகள்), ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று மற்றும் வேன் ஒன்றும்  ஆகியன மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எமது SMS செய்தி சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால், REG THINAKARAN -> 77000 வழியாக பதிவு செய்துள்ளோர் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்; சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன)


Add new comment

Or log in with...