வடமாகாணத்தில் தமிழில் பொலிஸ் சேவை | தினகரன்


வடமாகாணத்தில் தமிழில் பொலிஸ் சேவை

ஆளுநருடன் டிஐஜி சந்தித்துப் பேச்சு

வடமாகாணத்தில் பொலிஸ் சேவையைத் தமிழில் நடத்துவது பற்றி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  

ஆளுநர் செயலகத்தில் நேற்று (26) முற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் வட மாகாணத்தில் பொலிஸ் சேவையினைத் தமிழ் மொழி மூலம் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.  

அத்துடன், வடமாகாணத்தில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும்  இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

(புங்குடுதீவு குறுப் நிருபர்)


Add new comment

Or log in with...