தமிழில் காஞ்சனா; ஹிந்தியில் லக்‌ஷ்மி | தினகரன்

தமிழில் காஞ்சனா; ஹிந்தியில் லக்‌ஷ்மி

ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார்.

காஞ்சனா 3வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார்.

காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூலம் வெற்றியை கண்டாலும், பழைய காஞ்சனா படங்களை போலதான் இந்த படமும் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் காஞ்சனா என்ற பெயரை மாற்றி லக்‌ஷ்மி என்று தலைப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...