வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை | தினகரன்

வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை

வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் மற்றும் கடைகள் என்பன பொலிசாரால் சோதனைக்கு உட்பட்படுத்தப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வவுனியாயில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் என்பவற்றையும் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் சோதனை செய்தனர். அத்தோடு புதிதாக வவுனியாவில் குடியேறியவர்கள் மற்றும் புதிதாக வர்த்தகம் செய்வோர் ஆகியோரையும், அவர்களது இடங்களையும் பொலிசார்சோதனை செய்ததுடன் அவர்களது விபரங்களையும் பதிவு செய்தனர்.

அத்துடன், வவுனியா புதிய பேரூந்து நிலையம், வைத்தியசாலை என்பவற்றிலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் சுற்றி வளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நகரின் சில பகுதிகளில் பதற்றமான நிலை காணப்பட்டது.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...