யாழ். போதனா வைத்தியசாலைக்கு அநாவசிய பொதிகள் கொண்டுவரத் தடை | தினகரன்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அநாவசிய பொதிகள் கொண்டுவரத் தடை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என,  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,  வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டே இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும்;, அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள்,  பணியாளர்கள்,  நோயாளிகளைப் பார்வையிட வருவோர் உள்ளிட்ட அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆகையால், வைத்தியசாலைக்கு வருவோர் சோதனையின் பின்னர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதோடு,  அவர்கள் தம்முடன் எடுத்துவரும் பொதிகளையும் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இதனால், நேரம் விரையமாகின்றது.

எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்திற்;கொண்டு தம்முடன் தேவையற்ற பொதிகளை எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.

(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...