பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் | தினகரன்

பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக, பாகிஸ்தானும் பிரித்தானியாவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளன.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசி வாயிலாக நேற்று (24) தொடர்புகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் மற்றும் பிரித்தானிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவுவதற்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ  பிரித்தானியாவைச் சேர்ந்த குழுவினர் இலங்கைக்கு வருகை தருவார்கள் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...