உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு; இதுவரை 60 பேர் கைது | தினகரன்

உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு; இதுவரை 60 பேர் கைது

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 359 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 39 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளதுடன் 20 வெளிநாட்டினரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம்

ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரும் நடத்திய விசாரணைகளின் போது 9 தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கவைத்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களின் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணியில் இதுவரை 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்களில் 32 பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன் 4 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...