வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள் | தினகரன்


வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்

நீதிமன்றங்களில் தனக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்குத் தாக்கல் செய்வதோடு யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களில்  தனக்கு எதிராக இதுவரையில் 217வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதனைத் தான் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர்,  அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையிலும் கூட வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக, தெரிவித்தார்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...