Friday, March 29, 2024
Home » நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு கொழும்பில் கௌரவிப்பு நிகழ்வு
YMMA, YWMA ஏற்பாட்டில்

நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு கொழும்பில் கௌரவிப்பு நிகழ்வு

by Gayan Abeykoon
January 4, 2024 7:08 am 0 comment

அகில இலங்கை YMMA பேரவை மற்றும் இளம் பெண்கள் முஸ்லிம் சங்கம், YWMA ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கிக்கு பிரியாவிடை வைபவம் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்வில் YMMA தேசியத் தலைவர் இஹ்ஸான் ஹமீட் மற்றும் YWMA தலைவி திருமதி பவாஸா தாஹா ஆகியோர் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது மனைவியை மாலை மற்றும் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

YMMA இஹ்சான் ஹமீட் மற்றும் YWMA தலைவி திருமதி பவாஸா தாஹா ஆகியோர் உயர் ஸ்தானிகர் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கும் பொதுவாக நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டினர். ஏழை மக்களுக்கு குடிநீர் வழங்குவதிலும் தொலைதூர கிராமங்களில் உள்ள விதவைகளுக்கு உதவுவதிலும் தூதுவர் சிறப்பு அக்கறை காட்டுவதாக பவாசா தாஹா கூறினார்.

கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியரும் YMMA மீடியா உபகுழுவின் தலைவருமான மொஹமட் ரசூல்டீன் தனது சுருக்கமான உரையில், பாகிஸ்தான் தூதுவர் இலங்கையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தீவில் உள்ள மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் கௌரவம் பெற்றார் என தெரிவித்தார்.

YMMA நப்பிக்கையாளர் சபைத் தலைவர் காலித் எம். பாரூக், செயலாளர் ஆஷிப் சுக்ரி, YWMA செயலாளர் சுரயா ரிஸ்வி உட்பட YWMA இன் உப தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT