Tuesday, March 19, 2024
Home » மல்ஹருள் இஸ்லாம் சங்கத்தின் 90ஆவது ஆண்டு வருடாந்த நிகழ்வு
கொழும்பு, கொம்பனி வீதியில் இயங்கும்

மல்ஹருள் இஸ்லாம் சங்கத்தின் 90ஆவது ஆண்டு வருடாந்த நிகழ்வு

by gayan
January 4, 2024 12:06 pm 0 comment

கொழும்பு 2, கொம்பனி வீதியில் இந்திய முஸ்லிம்களால் 1933ல் மல்ஹருள் இஸ்லாம் சங்கத்தின் (Malharul Islam Association) பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் சிறார்களின் ஆன்மீக கல்வி மற்றும் பாலர் பாடசாலைக் கல்விக்காக இவ் கல்வி நிலையத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்.

இப்பிரதேசத்தில் வசதி குறைந்த மக்களது ஆன்மீகக் கல்விக்காக 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமது பாடசாலை முடிந்து வீடு வந்ததும் மார்க்கக் கல்வியை பயிலுவதற்காக இங்கு வந்து ஆன்மீக கல்வியை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக் கல்வி நிறுவனம் ஆரம்பித்து இன்று 90 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்நிறுவனத்தின் 90வது நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி மற்றும் கவிஞருமான டொக்டர் தாசீம் அஹ்மத் கலந்து கொண்டார். இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற சகல மாணவர்களுக்கும் வெற்றிக் கிண்ணமும் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த 45 வருட காலமாக கொம்பனி வீதி பிரதேச மக்களுக்கு ஆற்றும் வைத்திய சேவைக்காக டாக்டர் தாசீம் அஹமது மற்றும் சங்கத்தின் நிர்வாகத்தினரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் கொவிட் மற்றும் நாட்டில் ஏற்பட்ட சில அசம்பாவித சூழ்நிலைகளினால் இக் கல்வி நிலையம் மூடப்பட்டிருந்தது. அதனை மீள் திறந்து இப் பிரதேச வாழ் மக்களது சிறார்களின் மார்க்க கல்வியை மற்றும் பாலர் பாடசாலைக் கல்வியையும் புகட்டி இப் பிரதேச மாணவ மாணவிகளை சிறந்த நல்ல பிரஜைகளாக மாற்றுவதற்கும் இச் சங்கம் தம்மை அர்ப்பணிப்பதையிட்டு டொக்டர் தாசீம் அஹமத் பாராட்டுத் தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT