Tuesday, March 19, 2024
Home » அதிகஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிய ‘வரலாற்று விழுதுகள்’

அதிகஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிய ‘வரலாற்று விழுதுகள்’

by gayan
January 4, 2024 5:02 pm 0 comment

‘வரலாற்று விழுதுகள்’ அமைப்பின் வருட இறுதி ஒன்றுகூடலும், அதிகஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேத்தில் நடைபெற்றன.

‘வரலாற்று விழுதுகள்’ அமைப்பினால் வறுமையை ஒழித்து கற்றலுக்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் அமைப்பின் தலைவர் தவலிங்கம் ஐங்கரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேச பாடசாலையான 39ஆம் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திருவருள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

‘வரலாற்று விழுதுகள்’ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்ற சமூகநலப் பணிகளுக்கு இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மாணவர்களும் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்…

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT