கொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன | தினகரன்

கொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவுக்கு வீசா வழங்கிவரும் ஐ.வி.எஸ் வீசா நிலையம் (IVS Lanka) மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா வழங்கிவரும் வி.எப்.எஸ். குளோபல் நிலையமும் (VFS Global) மூடப்பட்டுள்ளன.

அத்தோடு மலேசியா, தாய்லாந்து, சீன தூதரகங்களின் இணை சேவை வீசா வழங்கும் நிலையங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...