செல்பி காட்சிதரும் கொரில்லாக்கள் | தினகரன்

செல்பி காட்சிதரும் கொரில்லாக்கள்

கொங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் எடுக்கும் செல்பி புகைப்படங்களுக்கு இரு கொரில்லாக்கள் ‘போஸ்’ கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருங்கா தேசியப் பூங்காவில் கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பணியாற்றும் பேட்ரிக் சாடிக் என்பவர் அவ்வப்போது கொரில்லாக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து வந்துள்ளார்.

நாளடைவில் அவர் கைபேசியை தூக்கினாலே அங்கிருக்கும் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற இரு கொரில்லாக்கள் வேகமாக வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கின்றன. கொரில்லாக்களின் இந்தச் செயல் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நான்கு மாதங்களாக இருந்த பொது இந்த கொரில்லாக்களின் தாய்கள் கொல்லப்பட்டுள்ளன. அது தொடக்கம் இவை இந்த பூங்காவில் வாழ்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...