பனிச்சரிவால் மூன்று மலையேறிகள் பலி | தினகரன்

பனிச்சரிவால் மூன்று மலையேறிகள் பலி

கனடாவின் பன்ப் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக மூன்று முன்னணி மலையேறிகள் உயிரிழந்துள்ளனர்.

ஹோஸ் மலை உச்சியை நோக்கி கிழக்கு முகமாக ஏற முயற்சித்தபோது ஆஸ்திரிய நாட்டின் இரு மலையேறிகள் மற்றும் ஒரு அமெரிக்க நாட்டவருமே உயிரிழந்துள்ளனர். இந்த குழுவினர் கடந்த புதன்கிழமை காணாமல்போன நிலையில் அவர்கள் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இவர்களை தேடும் முயற்சி சீரான காலநிலையால் தடைப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாக மலையேறிகளுக்கு நிதியாதரவு அளித்த ‘தி நோர்த் பேஸ்’ நிறுவனம் கூறியது.

இதற்கு முன்னர் ஒரு தடவை மாத்திரமே ஏறப்பட்ட பகுதியால் குறித்த மலை உச்சியை அடைய முயற்சித்துள்ளனர்.


Add new comment

Or log in with...