வாடகைக்கு இருந்த தம்பதி மாயம்; போதைப்பொருள், தோட்டா மீட்பு | தினகரன்


வாடகைக்கு இருந்த தம்பதி மாயம்; போதைப்பொருள், தோட்டா மீட்பு

வாடகைக்கு இருந்த தம்பதி மாயம்; போதைப்பொருள், தோட்டா மீட்பு-Kandana-Batagama-Avariwatta-Suspicious House-T56 Bullets and Drug Found

கந்தானை, பட்டகம, எவரிவத்தையில் சந்தேகத்திற்கிடமான வீட்டிலிருந்து கஞ்சா, ஐஸ், குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் T56 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள 8 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவன், மனைவி ஆகிய தம்பதியினர் வாடகைக்கு எடுத்துள்ளதோடு, அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கந்தானை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வீட்டை சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா 15kg, ஐஸ் 15g குஷ் 25g உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் T56 தோட்டாக்கள் 8 ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை கந்தானை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...