குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் 321ஆக உயர்வு | தினகரன்

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் 321ஆக உயர்வு

குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதோடு, இச்சம்பவங்களில் 521 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன் கிரான்ட் ஹோட்டல், சங்ரீ லா ஹோட்டல் ஆகியவற்றிலும், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் மற்றும்  தெமட்டகொடை மஹவில கார்டன் ஆகிய 8இடங்களில்  நேற்றுமுன்தினம் (21) குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

இவ்வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 321ஆக உயர்வடைந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...