மிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு | தினகரன்

மிகுந்த வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு

இலங்கையில்  இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான கடந்த ஞாயிறு காலையில் சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் தொடர்பில் மிகுந்த கவலை மற்றும் வேதனையடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மிகவும் கொடூரமான இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமது ஆழ்ந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் அத்தாக்குதல் சமயத்தில் கிறிஸ்தவர்கள் செபத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர் இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கும் இதனால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்கின்றேன் என்றும் அன்றைய தினம் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.(ஸ)


Add new comment

Or log in with...