தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு | தினகரன்

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு

நேற்று முன் தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சுமார் 500பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு சோதனைகளில் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 26பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 31வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பலியானவர்கள் இந்தியா, பிரித்தானியா, டென்மார்க், சவூதி, துருக்கி, சீனா ஆகிய நாட்டடைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...