மறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது | தினகரன்

மறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது-Shangri La Closed Until Further Notice

ஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (21) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்குள்ளான கொழும்பிலுள்ள ஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் முகாமைத்துவம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் ஹோட்டல் முகாமைத்துவம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், தங்களது ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலில் பல் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதையிட்டு தாம் வருந்துவதாகவும், அதில் தமது ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டோருக்கு தாம் உதவி வருவதாகவும், தமது ஹோட்டலில் தங்கியுள்ளவர்களுக்கு மாற்று தங்குமிட வசதிகள், போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான உதவிக்கு +603 2025 4619 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் அதன் முகாமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்றைய தாக்குதல்களில் கொழும்பிலுள்ள ஷங்ரி லா,  கிங்ஸ்பெரி, சின்னமன் கிராண்ட் ஆகிய மூன்று ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கெள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...