பலி 290 ஆக அதிகரிப்பு; தம்புள்ளையில் இருவர் கைது | தினகரன்

பலி 290 ஆக அதிகரிப்பு; தம்புள்ளையில் இருவர் கைது

பலி 290 ஆக அதிகரிப்பு; தம்புள்ளையில் இருவர் கைது-Death Toll Rise to 290-2 More Arrested in Dambulla

ஊரடங்கு தளர்த்தப்பட்டது

நேற்றைய தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு சோதனைகளில் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் என கருதப்படும் இருவர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு (21) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய குறித்த இருவரும் காத்தான்குடி மற்றும் மாவனல்லை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களை அடுத்து, நேற்று (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (22) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...