வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம் | தினகரன்


வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் கண்டனம்

நாட்டின் சில இடங்களில் இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோழைத்தனமான இந்தச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர், இவ்வாறான துயரமான சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களை ஒற்றுமையுடனும் பொறுமை காத்துச் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

அத்தோடு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செய்திகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...