இரத்த வங்கிக்கு முன்பாக குவிய வேண்டாமென அறிவிப்பு | தினகரன்

இரத்த வங்கிக்கு முன்பாக குவிய வேண்டாமென அறிவிப்பு

நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் கையிருப்பிலுள்ளதாக, தேசிய இரத்த வங்கி அறிவித்துள்ளது.

தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இரத்தம் வழங்கும் நோக்கில் எவரும் இரத்த வங்கிக்கு முன்பாக ஒன்றுகூடத் தேவையில்லை எனவும் இரத்த வங்கி  அறிவித்துள்ளது.

அத்தோடு, இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அறிவிப்பதாகவும் இரத்த வங்கி தெரிவித்தது.

மேலதிக விபரங்களுக்கு 0112 369 931  எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் தேசிய இரத்த வங்கி அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...