கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம் | தினகரன்


கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (21) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 
 
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் , வைத்திய அதிகாரி சமிந்தி சமரசிங்க தெரிவித்தார்.
 
இதேவேளை, நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பகுதியிலுள்ள சென். செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பிலுள்ள செவோன் தேவாலயத்திற்கு அருகிலும் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 
கொழும்பில் அமைந்துள்ள 3 ஹோட்டல்களில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சினமன் கிரான்ட், சங்கிரீலா, கிங்ஸ்பெரி ஆகிய ஹோட்டல்களிலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  
 
 
 
 
 

Add new comment

Or log in with...