சிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை | தினகரன்

சிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை

இம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும்  பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்,  சிவனொளிபாதமலைக்கு  இரண்டு இலட்சத்திற்கும் அதிகளவான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் சிவனொளிபாதமலைக்கு தொடர்ச்சியாக பக்தர்கள் வருகை தந்துகொண்டிருப்பதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்

பௌர்ணமி தினமான நேற்று (19) சிவனொளிபாதமலைக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், நல்லதண்ணி -மஸ்கெலியா பிரதான வீதியின் இரு மருங்குகளிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீதியில் நெரிசல் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

(இராமச்சந்திரன் -நோட்டன் பிரிஜ் நிருபர்)

 


Add new comment

Or log in with...