பாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு | தினகரன்

பாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

நாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை, போவல பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்றுவரும்  மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது காதலியுடன் நாவலப்பிட்டிப் பகுதிக்கு சுற்றுலா சென்றதாகவும், இதன்போது குறித்த மாணவனின் பாதணி கலபொட ஆற்றில் தவறி விழுந்தததாகவும், அதை எடுக்க முற்பட்டபோது குறித்த மாணவனும் ஆற்றில் தவறி விழுந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரின் உதவியுடன் குறித்த மாணவனின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

(இராமச்சந்திரன் -நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்)


Add new comment

Or log in with...