குருந்துகஹஹெதக்ம பகுதியில் 3 கிலோ ஹெரோயின் மீட்பு | தினகரன்

குருந்துகஹஹெதக்ம பகுதியில் 3 கிலோ ஹெரோயின் மீட்பு

குருந்துகஹஹெதக்ம பகுதியில், வாகன திருத்துமிடம் ஒன்றிற்கு (கராஜ்) அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதக்ம நுழைவு பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோகிராம் ஹெரோயினை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் நேற்று (18) இரவு 11.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதாகவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


Add new comment

Or log in with...