விஷ்வமடுவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி | தினகரன்


விஷ்வமடுவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

விஷ்வமடுவில் மின்னல் தாக்கி இளைஞன் பலி-Lightning-Killed-Vishwamadu-Kilinochchi

மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு, விஷ்வமடு பகுதியில் மின்னல் தாக்கி 17 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த இருவரும் குளிக்கச் சென்று, மழைக்கு ஒதுங்கி மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியுள்ளது.

இன்று (19) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தொட்டியடி, விஷ்வமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய தர்ம பாலசிங்கம் தயானந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் என்பவர் காயமடைந்து, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

(எஸ். தவசீலன், வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...