5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது | தினகரன்

5 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளொன்றில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இன்று (18) நண்பகல் 12.00 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து,  முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, கிரிபத்கொடை மாகொல, வை சந்தியில் குறித்த சந்தேக நபர், கைதுசெய்தப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர் களனி, கிரிபத்கொடையைச் சேர்ந்த சமரவீர ஆராச்சிகே ஜீவன் பெரேரா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநப ரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித் சந்தேகநபர், பொலிஸ் அதிரடிப் படையினரால், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான 'தெமட்டகொட சுத்தா' வினால் வழிநடாத்தப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...