பெரம்பூரில் இராணுவம் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் முறிவு | தினகரன்

பெரம்பூரில் இராணுவம் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் முறிவு

சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் நாம் தமிழர் கட்சியினரை துணை இராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு ஏற்பட்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெரம்பூரில் உள்ளது பெரியார் நகர் வாக்குச் சாவடி. இங்கு சாவடி முகவராக இருந்த நாம் தமிழர் கட்சியினர் ஒருவர் உணவு கொடுப்பதற்காக உள்ளே சென்றார்.

அப்போது துணை இராணுவத்தினர் அவரை தடுத்தனர். எனினும் அவர் உணவு கொடுப்பதற்காக செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். அப்போது அந்த முகவர் மீது துணை இராணுவ காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த முகவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அந்த சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Add new comment

Or log in with...