Friday, March 29, 2024
Home » சிறப்பான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள JAT Holdings PLC

சிறப்பான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள JAT Holdings PLC

by mahesh
January 3, 2024 10:00 am 0 comment
  • வருமான வளர்ச்சி 11% ; மொத்த இலாப வளர்ச்சி 2%
  • சவுதி அரேபியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் கூட்டு வணிக முயற்சிகள்
  • தீந்தை பூசும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த Pintharoo Shilpee Abhiman நிகழ்ச்சித்திட்டம்

மரப் பூச்சுகளில் இலங்கையின் சந்தை முன்னிலையாளராகவும் மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய மட்டத்திலான கூட்டு நிறுவனமாகவும் திகழும் JAT Holdings PLC, 2023/24 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான வலுவான நிதியியல் பெறுபேறுகளை சமீபத்தில் அறிவித்துள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், குழுமம் அதன் வரலாற்றில் அதிகபட்ச ஏற்றுமதி விற்பனைப்புரள்வாக ரூபா. 1,827 மில்லியன் தொகையை பதிவாக்கியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவாக்கப்பட்ட ரூபா 795 மில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 130% வளர்ச்சி கண்டுள்ளதுடன், சந்தை விரிவாக்க முயற்சிகள் இதன் உந்துசக்தியின் அங்கமாக உள்ளன. இதனுடன் இணைந்ததாக, குழுமமானது வருமானத்தில் 11% காத்திரமான வளர்ச்சியைப் பதிவுசெய்து 2023/24 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூபா. 4,878 மில்லியன் தொகையை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூபா. 4,392 மில்லியன் தொகையாக இது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மொத்த இலாபமும் இதே காலத்தில் 2% ஆல் சற்று அதிகரித்து ரூபா. 1,417 மில்லியன் தொகையாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய ஆண்டில் இது 1,383 மில்லியன் தொகையாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள JAT Holdings இன் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழிற்சாலையால் முன்னெடுக்கப்படும் பெறுமதி சேர் பொறியியலின் துணையுடன், அதன் புதிய தொழிற்சாலையின் வழிநடாத்தலில், பங்களாதேஷில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் மூலம் குழுமம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த மேம்பாடுகள், ஏற்றுமதி உட்பட வணிக விரிவாக்கத்தில் ஏனைய பங்களிப்பு காரணிகளுடன் சேர்ந்து, குழுமத்தின் குறிப்பிடத்தக்க வருமான வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

மீளாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் JAT Holdings PLC இன் வரிக்கு முந்தைய இலாபம் காத்திரமானதாக இருந்தாலும், அது வீழ்ச்சி கண்டுள்ளது. குழுமத்தின் வர்த்தகநாமங்களின் வரிசை மற்றும் அதன் நீண்ட கால சந்தைப் பங்கை வலுப்படுத்த எடுக்கப்பட்ட அவதானத்துடனான மூலோபாய தீர்மானங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இந்த தீர்மானங்களில், EV chargers களின் வலையமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவில் குழுமத்தின் கூட்டு வணிக முயற்சியாக பல்வகைப்படுத்தப்பட்ட நடவடிக்கையும் அடங்கியுள்ளது. குழுமமானது JAT Paints Africa Ltd நிறுவனத்தை கூட்டிணைப்புச் செய்தமை, தீந்தை பூசும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாய்ப்புக்களைக் கட்டியெழுப்புவதற்காக NAITA மற்றும் சிரச ஊடக வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அதன் Pintharoo Shilpee Abhiman நிகழ்ச்சித்திட்டம், மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள JAT காட்சியறைகள் மூலம் வழங்கல் விரிவாக்க முயற்சிகள், இலங்கையில் அதன் புதிய கட்டுப்பொருள் (பைண்டர்) தொழிற்சாலை மற்றும் பங்களாதேஷில் உள்ள அல்கைட் (alkyd) தொழிற்சாலை மூலம் உற்பத்தி விரிவாக்க முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் குழுமத்தின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முக்கியமான முதலீடுகளுடன் பெருமளவு முதலீடுகளை குழுமம் மேற்கொண்டுள்ளது.  

குழுமத்தின் மூலோபாய முயற்சிகள் குறித்து, குறிப்பாக சமீப காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில், JAT Holdings PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிஷால் பேர்டினாண்டோ அவர்கள் கருத்து வெளியிடுகையில், “குழுமத்தின் நிதியியல் நிலை தொடர்ந்தும் வலுவாக காணப்பட்டாலும், மற்றும் எமது பெறுபேறுகள் திருப்திகரமாக இருந்தாலும், இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மகத்தான மதிப்பைத் தொடர்ந்து வழங்குவதற்காக, எமது வர்த்தகநாம வரிசை மற்றும் உள்கட்டமைப்பில் அதிக அளவில் முதலீடு செய்வதில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு, தீர்மானங்களை  மேற்கொண்டுள்ளோம். அதன்படி, ஏற்றுமதி விரிவாக்கம் மற்றும் தன்னியக்கமயமாக்கம், பயனுள்ள செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள் மூலம் செயல்திறனை அதிகரிப்பதில் எமது கவனத்தை திசைதிருப்பியுள்ளோம். இது எமது ஐந்தொகையை மேலும் திரட்டவும், வலுப்படுத்தவும் உதவுவதுடன், நேர்மறையான பணப்பாய்ச்சலைப் பேணி மற்றும் எங்கள் நோக்கங்களை பூர்த்தி செய்ய போதுமான பணப்புழக்கத்தை பேணச்செய்கிறது,” என்று குறிப்பிட்டார்.

JAT Holdings PLC இன் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஈலியன் குணவர்தன அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் அதிகபட்ச பெறுமதியை வழங்குவதற்கான எமது தேடலில், எமது பலங்களில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி, தலையெழக்கூடிய பலவீனங்களை நிவர்த்தி செய்து வருகிறோம். எமது வர்த்தகநாமத்தின் பங்கு, வழங்கல் சங்கிலிகள் மற்றும் எமது சமூகங்களைப் பேணிப்பாதுகாக்கவும் நீண்டகால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம்.. குறிப்பாக எமது சமூகங்களைப் பொறுத்தவரை, பொருளாதார சவால்களில் இருந்து எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து நிவாரணத் திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறோம். அதே நேரத்தில் அடிமட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவும் Pintharoo Shilpee Abhiman போன்ற முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

அதன்படி, ஒரு சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில், JAT Holdings PLC நிறுவனம் தனது வர்த்தகநாம பங்கைக் கட்டியெழுப்பவும், உற்பத்தி மேம்படுத்தல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மூலோபாய முதலீடுகளைத் தொடர்ந்து, ஏற்றுமதித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் தனது நிதியியல் பெறுபேறுகளில் வலுவான ஸ்தானத்தை வெளிப்படுத்தியுள்ளது. தனது நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் மற்றும் போட்டித்திறனுக்கு இது உதவுமென நிறுவனம் நம்புகின்றது. தனது வழங்கல் சங்கிலியின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும், வெளிப்புற வழங்குநர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இது நிறுவனத்திற்கு இடமளிக்கிறது.

JAT Holdings PLC தொடர்பான விபரங்கள்
JAT Holdings PLC, இலங்கையில் மரப் பூச்சுகள் மற்றும் தூரிகைகளில் சந்தையில் முன்னணியில் திகழ்ந்து வருவதுடன், தீந்தை வகை மற்றும் ஆடம்பர வீடு மற்றும் அலுவலக தளபாட அலங்காரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கை மற்றும் பங்களாதேஷில் அமைந்துள்ள இரண்டு அதிநவீன உற்பத்தி தொழிற்சாலைகளுடன், இலங்கையில் உள்ள நவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் துணையுடன், JAT Holdings தொடர்ந்து புத்தாக்கங்களுக்கு உந்துசக்தியளித்து, முக்கிய செயல்பாட்டாளராகவும், பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கூட்டு நிறுவனமாகவும் தனது ஸ்தானத்தை வலுப்படுத்தி வருகின்றது. பாதகமான வெளிப்புற சூழல் நிலவிய காலகட்டங்களிலும், அதன் நிதியியல் ஸ்திரத்தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டு, Fitch Ratings இடமிருந்து ‘AA (lka)’ என்ற தேசிய நீண்ட கால தரமதிப்பீட்டை JAT Holdings PLC என்ற மதிப்பீட்டை பெற்றுள்ளது. அதே சமயம் LMD சஞ்சிகையால் பன்முகப்படுத்தப்பட்ட துறைக்காக மிகவும் மதிப்புமிக்க வகையில், மிகுந்த அளவில் 1 ஆவது ஸ்தானத்திற்கான விருதைப் பெற்ற நிறுவனமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தனது ஊழியர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் பணியிடத்தின் மகத்துவத்தையும் Great Place to Work சான்று அங்கீகாரத்தின் மூலமாக நிரூபித்து, அபிமானத்திற்குரிய தொழில்தருநராகவும் மாறியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT