யாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம் | தினகரன்

யாழ். மீசாலையில் மின்னல் தாக்கி இருவர் படுகாயம்

யாழ். மீசாலைப் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீசாலை வடக்கு தட்டாங்குளப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த அம்பலவாணார் சிவசுப்பிரமணியம் (65), அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (65) ஆகியோரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளானார்கள்.

இவர்கள் இருவரும் நேற்று (17) மரமொன்றின் கீழிருந்து உரையாடிக்கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானார்கள்.

இவர்களின் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க, யாழ். குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் (16)  மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி பெண்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர்.

(மயூரப்பிரியன் -யாழ். விசேட நிருபர்)


Add new comment

Or log in with...