கண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம் | தினகரன்

கண்ணிவெடி வெடித்ததில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்,  முகமாலையில் கண்ணிவெடியொன்று வெடித்ததில் படுகாயமடைந்த இருவர்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களே நேற்று (17) இடம்பெற்ற  இந்த அனர்த்தத்தில்  படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தனைச் சேர்ந்த 6வயதுப் பிள்ளையின் தாயான குனேந்திரன் ரேணுகா (25), மேகலதா ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

முகமாலையில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்று  வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போதே குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

(மயூரப்பிரின் -யாழ்.விசேட நிருபர்)


Add new comment

Or log in with...