வட்டவளையில் விபத்து; 9 பேர் படுகாயம் | தினகரன்

வட்டவளையில் விபத்து; 9 பேர் படுகாயம்

வட்டவளைப் பகுதியில் வேன் ஒன்று சுமார் 10அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில், 3பெண்கள் உட்பட  9பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. 

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஹட்டன் நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்குள்ளானார்கள் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த வேனில் பயணித்த 9பேரும் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்; 4  பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேனில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

(கிருஷாந்தன் -ஹற்றன் சுழற்சி நிருபர்,  இராமச்சந்திரன் -நோட்டன் பிரிட்ஜ் நிருபர் )  


Add new comment

Or log in with...