கடும் வரட்சியினால் சுமார் 580,717 பேர் பாதிப்பு | தினகரன்

கடும் வரட்சியினால் சுமார் 580,717 பேர் பாதிப்பு

தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக சுமார் 152,953 குடும்பங்களைச் சேர்ந்த 580,717 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

21 மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வரும் நிலையில், அம்மாவட்டங்கள் வரட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, கண்டி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களே வரட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.


Add new comment

Or log in with...