உணவுப் பண்டங்களுக்கான நிறக் குறியீடு ஜூனில் அமுல்

போஷாக்கு உணவு மற்றும் அரைததிட உணவுகளுக்கான நிறக் குறியீட்டு செயன்முறை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.  

இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாகவும் விரைவில் அதை வெளியிடவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

உணவுப் பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு செயன்முறை இம்மாதம் (ஏப்ரல்) 02ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. வர்த்தமானி அறிவித்தலை மொழி மாற்றம் செய்வதில் ஏற்பட்ட  தாமதம் காரணமாக வர்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்த முடியாது போனது. இதற்கு பிஸ்கட் மற்றும் இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்களிடமும் ஆதரவு கிடைத்துள்ளது.   வர்ணக் குறியீட்டு செயன்முறையின் பிரகாரம் 100கிராமுடைய உணவு பண்டமொன்றுக்கு 22கிராம் சீனி கலக்கப்படுமானால் சிவப்பு நிறமும், 8தொடக்கம் 22கிராமுக்கு இடைப்பட்ட வீதத்தில் சீனி கலக்கப்பட்டால் செம்மஞ்சல் நிறமும், 8கிராமுக்கு குறைவாக சீனி கலக்கப்பட்டால் பச்சை நிறமும் பயன்படுத்தப்படவுள்ளது.   இதேவேளை, 100கிராம் உணவுப்பண்டத்திற்கு 1.25கிராம் உப்பு கலக்கப்பட்டால் சிவப்பு நிறமும், 0.25தொடக்கம் 1.25கிராமுக்கு இடைப்பட்ட விதத்தில் உப்பு கலக்கப்பட்டால் செம்மஞ்சல் நிறமும், 0.25கிராமுக்கு குறைவாக உப்பு கலக்கப்பட்டால்பச்சை நிறமும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)


Add new comment

Or log in with...