Home » அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியருகே புத்தாண்டில் ஆசிவேண்டி தர்மோபதேசம்

அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியருகே புத்தாண்டில் ஆசிவேண்டி தர்மோபதேசம்

போக்குவரத்து அமைச்சு, ரயில்வே திணைக்களம் ஏற்பாடு

by mahesh
January 3, 2024 7:10 am 0 comment
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, சியாம் மகாநிக்காய மல்வத்துப் பிரிவின் கண்டி வலய பிரதம சங்கத் தலைவர், அட்டமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை தர்மோபதேசத்துக்கு சம்பிரதாய பூர்வமாக அழைத்தபோது.

புத்தாண்டை முன்னிட்டு (2024) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களம் என்பன ஏற்பாடு செய்த தர்மோபதேச பிரித் வைபவம் அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதியில் நடைபெற்றது. சியாம் மஹா நிகாயவின் மல்வத்து பிரிவின், கண்டி வலய பிரதான சங்க நாயக்கர், அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரின் ஆலோசனையின் பேரில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவின் வழிகாட்டுதலின்கீழ், ரயில்வே திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

2023 இல், ஆரம்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான நிர்மாணப் பணிகள் நிறைவு, மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள மஹவ முதல் அனுராதபுரம் வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இப்புண்ணிய நிகழ்வு நடைபெற்றது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனமான ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறான மத நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய ப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

எதிர்வரும் காலத்திலும் வருடந்தோறும் ஜயஸ்ரீ மகாபோதி முன்னிலையில் இவ்வாறான தர்ம உபதேச நிகழ்வை ரயில்வே திணைக்கத்துடன் இணைந்து தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் தெரிவித்தார்.

அடமஸ்தானதிபதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் தலைமையில் நடைபெற்ற இப்புண்ணிய நிகழ்வுக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித். ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார, வடக்கு ரயில்வே அபிவிருத்தி திட்டங்களுக்குப் பொறுப்பான இந்தியன் இர்கோன் நிறுவனத்தின் பிரதிநிதிகள், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT